Home சினிமா கோலிவுட் காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன்: இயக்குநர் ஹரி!

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன்: இயக்குநர் ஹரி!

257
0

Director Hari; காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன்: இயக்குநர் ஹரி! சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசிய இயக்குநர் ஹரி காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக 5 படங்கள் எடுத்ததற்கு நான் வெட்கப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் ஹரி. இவரை போலீஸ் இயக்குநர் என்று அழைப்பதும் உண்டு.

இவரது பெரும்பாலான படங்களில் போலீஸ் கதைதான் முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த வகையில், சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என்று காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக 5 முக்கியமான படங்களை எடுத்துள்ளார்.

தற்போது அதற்கு வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் ஹரி தன் பங்கிற்கு ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் சம்பவம் போன்று இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்து விடக்கூடாது.

அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையை இன்று களங்கப்படுத்தியுள்ளது.

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன் என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். சூர்யாவின் கண்டன அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் கூறியிருப்பதாவது: அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்றும், நீதி நிலைநாட்டப்படும் என்றும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Hari Film Director

Previous articleபுல்லட்டை ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த தல பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்!
Next articleசன் டிவியில் ஒளிபரப்பான தல அஜித்தின் விவேகம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here