Home சினிமா கோலிவுட் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன்: நடிகர் அர்ஜூன் தாஸ்!

மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன்: நடிகர் அர்ஜூன் தாஸ்!

312
0
Arjun Das Master Trailer

மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன்: நடிகர் அர்ஜூன் தாஸ்! விஜய் நடித்துள்ள மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன் என்று மாஸ்டர் பட நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் டிரைலரை 6 முறை பார்த்தேன் என்று நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் மாஸ்டர். கல்வி முறையை மையப்படுத்திய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, நாசர், சஞ்சீவ், சந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது. ஆனால், நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் விளைவாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு படத்திற்கு பிறகு நடைபெறும் டப்பிங், எடிட்டிங் பணிகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விரைவில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிக்கப்பட்டு, மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் டிரைலர் 3.28 நிமிடம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மாஸ்டர் படத்தில் விஜய் வரும் காரின் நம்பரும் TMH 3228 என்று அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய் வரும் கார் ரோலர் கோஸ்டர் ரைடு என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் மாஸ்டர் பட நடிகர் அர்ஜூன் தாஸ் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது மாஸ்டர் டிரைலர் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன். டிரைலர் மரண மாஸாக வந்துள்ளது.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று நினைக்கிறேன்.

ஆனால், டிரைலர் எப்போது வெளிவந்தாலும் இத்தனை நாட்கள் காத்திருந்ததற்கு செம்ம விருந்தாக இருக்கும்.

இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். தயாரிப்பாளர் மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பார்.

மாஸ்டர் டிரைலரில் விஜய் பேசிய டயலாக் ஒன்று இருக்கிறது. அது மரண மாஸாக இருக்கும்.

மாஸ்டர் படம் திரையில் தான் வெளியாகும். ஆன்லைனில் வெளிவராது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here