Home சினிமா கோலிவுட் HBD Madhumitha: பைக், கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்: ஜாங்கிரி மதுமிதா பெருமிதம்!

HBD Madhumitha: பைக், கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்: ஜாங்கிரி மதுமிதா பெருமிதம்!

320
0
HBD Madhumitha

Jangiri Madhumitha: பைக், கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்: பிக் பாஸ் மதுமிதா பெருமிதம்! கொரோனா லாக்டவுன் நேரத்தில் தான் பைக் மற்றும் கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக பிக் பாஸ் புகழ் மதுமிதா தெரிவித்துள்ளார்.

மதுமிதா தான் பைக் மற்றும் கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. இவரை ஜாங்கிரி மதுமிதா என்றும் அழைப்பது உண்டு.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில், மிரட்டல், அட்டகத்தி, ராஜா ராணி, தெனாலிராமன், காக்கிசட்டை, காஞ்சனா 2, புலி, காஷ்மோரா, ஸ்கெட்ச், கஜினிகாந்த், விஸ்வாசம், அசுரகுரு என்று பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். லொள்ளு சபா, மாமா மாப்ளே, பொண்டாட்டி தேவை, அத்திப்பூக்கள், அழகி, சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 3, காமெடி ஜங்கசன் ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இவ்வளவு ஏன், கடந்தாண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டு, கையை அறுத்துக் கொண்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பேட்டிகளை அளித்து வந்த நிலையில், ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், தோட்ட வேலை பார்ப்பது, சமையல் செய்வது, துணி துவைப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா, வீட்டை சுத்தம் செய்வது என்று தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில், தற்போது மதுமிதாவும் கொரோனா லாக்டவுனை பயனுள்ள வகையில், பயன்படுத்தியுள்ளார். ஆம், பைக் மற்றும் கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, எப்போதும், யாரையாவது சார்ந்து இருப்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன்.

மற்றொரு ஓட்டுனர் இல்லாமல் தற்போது பயணிக்கிறேன். வீடியோ நாளை வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கேற்ப இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்சர் பைக்கில் பயணம் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

சிலர், தன்னம்பிக்கையில், பெண் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்கு மதுமிதா உதாரணம் என்று குறிப்பிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மதுமிதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleராஜமேளத்துடன் வெளியான கர்ணன் மேக்கிங் வீடியோ!
Next articleபிரமாண்ட இயக்குநர் ராஜமௌலிக்கு கொரோனா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here