Home சினிமா கோலிவுட் Nanbar Ajith: நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும்: விஜய்!

Nanbar Ajith: நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும்: விஜய்!

483
0
Nanbar Ajith

Nanbar Ajith; நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும்: விஜய்! மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு கோட் சூட்டில் வந்த விஜய், நண்பர் அஜித் மாதிரி உடை அணிய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி என்றார்.

நண்பர் அஜித் (Nanbar Ajith) மாதிரி தான் உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக இப்படி வந்ததாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது விஜய் பேசியுள்ளார்.

பொதுவாக அஜித் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், கோட் சூட்டில்தான் வலம் வருவார். அண்மையில் கூட, ஆத்விக் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் கூட அஜித் கோட் சூட்டில் வலம் வந்திருந்தார்.

அவரேப் போன்று தற்போது விஜய்யும் தான் உடை அணிந்து வரவேண்டும் என்பதற்காக இப்படி வந்ததாக கூறினார்.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இதில் மாஸ்டர் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய விஜய்யிடம் முதலில் உங்களது உடைக்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காஸ்டியூமர் பல்லவிதான் என்றார். அதன் பிறகு நண்பர் அஜித் (Nanbar Ajith) மாதிரி உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி வந்ததாக கூறினார்.

விஜய் அவ்வாறு கூறியதைத் தொடர்ந்து #NanbarAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் அதிகளவில் டிரெண்டாகி வருகிறது.

நெய்வேலியில் படப்பிடிப்பின் போது உங்களுக்காக ரசிகர்கள் வந்தார்களே! அந்த தருணம் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றார். வேற லெவல் நீங்க…ரெய்டும் ஜாலியா இருக்கு…

இறுதியில், விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த முத்தத்தை திருப்பி அவருக்கே கொடுத்துள்ளார் விஜய். ஆம், மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம் கொடுத்துள்ளார். தொடர்ந்து இசை வெளியீடும் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here