Home சினிமா கோலிவுட் அம்மன் வேடம் யாருக்கு பொருத்தம்? டிரெண்டாகும் அம்மன் வேடத்தில் நடிகைகள் ஹேஷ்டேக்!

அம்மன் வேடம் யாருக்கு பொருத்தம்? டிரெண்டாகும் அம்மன் வேடத்தில் நடிகைகள் ஹேஷ்டேக்!

435
1
Nayanthara Mookuthi Amman

Nayanthara Mookuthi Amman; அம்மன் வேடம் யாருக்கு பொருத்தம்? டிரெண்டாகும் அம்மன் வேடத்தில் நடிகைகள் ஹேஷ்டேக்! அம்மன் வேடம் எந்த நடிகைக்கு கச்சிதமாக இருக்கும் என்ற விவாதம் அம்மன் வேடத்தில் நடிகைகள் என்ற ஹலோ ஹேஷ்டேக் மூலம் நடந்து வருகிறது.

அம்மன் வேடத்தில் நடிகைகள் என்ற ஹலோ ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே பக்தி படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில், நடிகைகள் பலரும் சாமி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதுவரை, கே ஆர் விஜயா, ஜெயலலிதா, வெண்ணிறை ஆடை நிர்மலா, ஸ்ரீதேவி, மீனா, விஜயசாந்தி, ரோஜா, ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா, ராதா ஆகியோர் அம்மன் வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களது வரிசையில், தற்போது முன்னணி மாஸ் நடிகையான நயன் தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்காக விரதமும் இருந்துள்ளார். மேலும், அசைவ உணவுகளை தவிர்த்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதன் மூலம், அம்மன் வேடம் யாருக்கு கச்சிதமாக பொருந்தும் என்ற விவாதம் ஹலோவில் தொடங்கியுள்ளது. மேலும், அம்மன் வேடத்தில் நடிகைகள் என்ற ஹலோ ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

இதன் மூலம், நடிகைகள் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, அதில், எந்த நடிகைக்கு அம்மன் கதாபாத்திரம் கச்சிதமாக இருக்கும் என்று பலரும் விவாதம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உங்களுக்கு பிடித்த நடிகைகளில் யார் அம்மன் கதாபாத்திரத்திற்கு சரியானவராக இருப்பார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here