Home சினிமா கோலிவுட் பச்சை நிற உடையில் பளபளக்கும் இந்துஜா!

பச்சை நிற உடையில் பளபளக்கும் இந்துஜா!

273
0
Indhuja Photoshoot

Indhuja Photoshoot; பச்சை நிற உடையில் பளபளக்கும் இந்துஜா! பிகில் பட நடிகை இந்துஜாவின் பச்சை நிற போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பச்சை நிற உடையில் பளபளக்கும் இந்துஜாவின் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை இந்துஜா. கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா.

மேயாத மான் படத்திற்குப் பிறகு மெர்குறி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், இந்துஜா தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தின் மூலம்தான் பிரபலமானார். இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்து ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

இப்படத்தின் போது இவர் மீது பலரும் நக்கலாக விமர்சனம் வைத்ததாக அவரே குறிப்பிட்டிருந்தார். ஆம், பிகில் படத்தில், தலையில் விக் வைத்து நடித்திருந்தார். இதை வைத்தே பலரும் விமர்சனம் வைத்தனர்.

ஆனால், அது பிடித்திருந்ததாக இந்துஜா தெரிவித்துள்ளார். தற்போது, கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை இந்துஜா போட்டோஷூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுவும், பச்சை நிற உடையில் பச்சை பசேல் என்றும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பச்சை நிற உடையில் இந்துஜா பளபளக்கிறார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleமாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன்: நடிகர் அர்ஜூன் தாஸ்!
Next articleஅதிதீவிர ‘ஆம்பன்’ புயல் 20 ஆம் தேதி கரையை கடக்கும் :வானிலை ஆய்வுமையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here