பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக வலம் வந்த கவின் மற்றும் லோஸ்லியாவின் காதல் முடிவுற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
கவின் மற்றும் லோஸ்லியா காதல் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் கவின் மற்றும் லோஸ்லியா.
இந்நிகழ்ச்சியின் மூலம் கவின் மற்றும் லோஸ்லியா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு வைத்ததோடு காதலிக்கவும் தொடங்கினர்.
இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் திருமணம் பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போதே பிக் பாஸ் வீட்டிற்கு வந்த லோஸ்லியாவின் பெற்றோர் அவரை கண்டிக்கவும் செய்தனர்.
ஒரு நல்ல குடும்பத்து பெண் செய்யும் வேலையா? இது என்றும், நமது உறவினர்கள் பலரும் இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெற்று வர வேண்டும் என்று வாழ்த்திவிட்டு காதலுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றனர்.
இதையடுத்து முதலில் கவின் லோஸ்லியாவிடமிருந்து விலக நினைத்தாலும், அவரால் முடியாமல் போய்விட்டது. எனினும், இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அவரவர் வேலையில் பிசியாகிவிட்டனர். இந்த நிலையில், கவின் தனது சமூக வலைதளத்தில் கண்ணாடி முன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.
அதில், எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இது குறித்து விமர்சனம் செய்யும் வகையில், லோஸ்லியா கண்ணாடியின் முன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதை கண்ணாடியின் முன்பு நின்று நாமே கண்டுபிடித்து சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
திடீரென்று லோஸ்லியா இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவர் கவினை காதலித்ததைத் தான் தவறு என்று கூறுகிறாரா? இல்லை வேறு எதையாவது குறிப்பிடுகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இன்னும் சிலர் கவின் – லோஸ்லியா காதல் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், இருவரும் தங்களது காதல் விவகாரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.