Home சினிமா கோலிவுட் Ispade rajavum idhaya raaniyum: ‘இஸ்பேட் ராஜாவும் இதய இராணியும்’ படத்தின் ஒரு பார்வை!

Ispade rajavum idhaya raaniyum: ‘இஸ்பேட் ராஜாவும் இதய இராணியும்’ படத்தின் ஒரு பார்வை!

410
0
Ispade rajavum idhaya raaniyum

Ispade rajavum idhaya raaniyum: ‘இஸ்பேட் ராஜாவும் இதய இராணியும்’ படத்தின் ஒரு பார்வை! இப்படம் வெளிவந்து ஒரு வருடமாகிறது.

Ispade rajavum idhaya raaniyum

ஒரு காதலை  அதிதமாக மிகைப்படுத்தியே நம் பெறும்பாலான சினிமாக்கள் உருவாகும் சூழல் இங்கு அதிகம்.

அப்படியொரு சினிமா சூழலில் காதலை பெரிதும் மிகைப்படுத்தாமல் ஒரு காதலை தற்காலத்திற்கேற்ப சொல்லியது, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

விஜய்சேதுபதி அவர்கள் நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடிதான் இஸ்பேட் இராஜாவும் இதய இராணியும் படத்தையும் இயக்கினார்.

ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், ஷில்பா அவர்கள் கதாநாயகியாகவும் இப்படத்தில்  நடித்துள்ளனர்.

படத்திற்கு சாம் C.S இசையமைக்க கவின் ராஜ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். மா.கா.பா ஆனந்த், பாலசரவணண், பொன்வன்னன் மற்றும் இன்னும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நிகழ்பவை:

கதைசொல்லிய முறையிலேயே திரைக்கதை ஆரம்பிக்க மக்களும் கதை கேட்க ஆர்வமாகிறார்கள். அக்கதைக்குள்தான் கெளதம் மற்றும் தாராவின் காதல் கதை நிகழ்கிறது.

வெறுமனே அது காதலாக நிகழவில்லை.நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் கெளதம். பணக்கார வீட்டு பெண் தாரா.

இவர்களுக்குள் நடக்கும் மோதலில் இருந்துதான் காதல் நிகழ்கிறது. சொல்வதற்கு பல சினிமா கதையில் நிகழ்வதுபோல தோன்றலாம். ஆனால், அங்குதான் தன் திரைக்கதையைப் பயன்படுத்தி மாறுபடுகிறார் இயக்குனர்.

மோதலில் இருந்து ஆரம்பித்த காதல் தேன்சுவையாக நிகழ்கிறது. உரையாடல்கள், சந்திப்புகள், காமம், காதல் என காதலுக்குண்டான அத்தனை நல்பரிணாமங்கள் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் கெளதமின் கடந்தகாலம் நிகழ்காலத்தையும் பாதித்து கொண்டிருப்பதை தாரா அறிகிறாள். அந்த கடந்தகாலத்தின் இழப்பையும் தன் காதலால் சரிக்கட்ட முயல்கிறாள்.

கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றாள். அந்த இழ்ப்பு என்பது கெளதமின் அம்மா. அம்மா இறக்கவில்லை, ஆனாலும் இவனுடன் இருக்கவில்லை. கெளதமை தாரா முழுவதுமாக தன் காதலால் ஆட்கொள்கிறாள்.

மாற்றம்:

நாம் காதலிக்கும் நபர் நம்மை தவிர்த்து மற்றவர்களிடம் சற்றே நெருங்கி பழகுதல் போல தோற்றமளித்தாலே நமக்கு போதுமானது. நமக்குள் இருக்கும் சந்தேக உணர்வையும் பயத்தையும் ஒருசேர உசுப்பிவிட.

குறிப்பாக ஆண்களுக்கு இவைகள் அதிதம் நிகழ்வதை நம்மால் காணமுடிகிறது. ஆண்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று நான் ஆண் என்ற கர்வத்தை தன் காதலிக்கும் பெண்ணின் மீது காட்ட பார்ப்பார்கள்.

இப்படியான ஒரு நிகழ்வு கெளதம் தாரா வாழ்விலும் நடக்கிறது. தாரா அப்படியெலல்லாம் எதுவும் நிகழவில்லை என்று முடிந்தவரை சமாதனப்படுத்த, கெளதமால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தாராவுக்கு கெளதம் மேலிருக்கும் நம்பிக்கை கெளதமிற்கு தாராவின் மேல் இல்லை அதே சமயம் தாராவும் தன் அம்மா போல் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாளோ என்ற பயமும் கெளதமிடத்தில் இருந்தது.

மேலும், தாரா தன்னை ஒதுக்குவதாகவும் விட்டு விலகுவதாகவும் நினைத்த கெளதம் அவளை கொல்லச்சென்று பிறகு மனம்மாறி நிற்பதும் அழுவதும் படத்தின் உச்சம்.

“உயிருக்கு உயிரா நேசிச்ச ஒருத்தவங்கள எப்படி வெறுக்க முடியுது?””அன்பு எந்த புள்ளியில் வெறுப்பா மாறுகிறது”.

போன்ற கேள்விகளை நம்மிடத்தில் திரைப்படம் விட்டுச்செல்கிறது. நம்மை நாமே கேள்வி கேட்கும்படியாகத்தான் படம் நிறைவடைகிறது.

இம்மாதிரியான திரைப்படங்கள் இன்னும் நிறைய நம் தமிழ் சினிமாவிற்கு தேவைப்படுகிறது. இப்படியான திரைப்படத்திற்காக இயக்குனர் இரஞ்சித் ஜெயக்கொடி அவர்களுக்கு நன்றி!

இஸ்பேட் இராஜாவும் இதய இராணியும் திரைக்கு வந்து ஒரு வருடமாகிறது. படத்தை பார்க்க தவறியவர்கள், ஹாட்ஸ்டாரில் படத்தை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Previous article15/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleகுறித்த நேரத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here