Iswarya Menon; ஆப்பிள் பெண்ணே ஐஸ்வர்யா மேனன் பர்த்டே டுடே! ஈரோட்டில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் பர்த்டே டுடே HBD Iswarya Menon.
ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஈரோட்டில் பள்ளி படிப்பை முடித்த ஐஸ்வர்யா மேனன், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். யுனிவெர்சிட்டியில் பிடெக் படித்துள்ளார்.
ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அம்மா, மகள் உறவை மையப்படுத்தி இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது.
ஆனால், இந்தப் படம் வருவதற்கு முன்னதாகவே தீயா வேலை செய்யனும் குமாரு படம் வெளியாகியுள்ளது. ஆதலால், ஐஸ்வர்யா மேனனின் முதல் படமாக இது கருதப்படுகிறது.
தமிழைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள மொழியிலும் அறிமுகமாகியுள்ளார். வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது எந்தப் படத்திலும் ஐஸ்வர்யா மேனன் கமிட் ஆகவில்லை. ஆனால், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்று தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஐஸ்வர்யா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.