Home நிகழ்வுகள் தமிழகம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்தது 8 பேர் காயம்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்தது 8 பேர் காயம்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன்

நெய்வேலி: நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்தது 8 பேர் காயமடைந்தனர் மேலும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என நிர்வாகம் தெரிவித்தது.

32மீட்டர் உயரத்தில் இருந்து வேலை செய்தனர்

நெய்வேலியில் உள்ள டிஎஸ் II மின்சார உற்பத்தியக(power plant)த்தில் தீ விபத்து ஏற்பட்டது இதில் 2 நிரந்தர பணியாட்கள் மற்றும் 6 ஒப்பந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக, நிலக்கரி சுரங்க நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த கொதிகலன் 84 மீட்டர் உயரம் மற்றும் விபத்து நடந்த பொழுது பணியாட்கள் 32 மீட்டர் உயரத்தில் நின்று கொண்டு வேலை செய்தனர் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்தது.

“இந்த நிர்வாகம் தற்போது பொது நிர்வாகி உட்பட 6 பேர் கொண்ட செயற்குழுவை விபத்து பற்றி விசாரணை செய்து விரைவாக தக்க நடவடிக்கை எடுப்பதற்காக அமைத்துள்ளது,” என நிர்வாகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இராகேஷ் குமார் தெரிவிக்கையில், காயம் பட்டவர்கள் உடனடியாக திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார்.

210 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

இந்த விபத்தால் 210 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்படும் எனவும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தபின் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தக்க உதவிகள் செய்யப்படும் என நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் தெரிவித்தது.

Previous articleதந்தையை வெட்டிக்கொன்ற மகன், தங்கையை கொன்றஅண்ணன்; டாஸ்மார்க் ஸ்டோரிஸ்
Next articleஆப்பிள் பெண்ணே ஐஸ்வர்யா மேனன் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here