Iswarya Menon Waterfall Photoshoot; அருவிக்கு அருகில் போட்டோஷூட்: வைரலாகும் ஐஸ்வர்யா மேனன் அழகான புகைப்படங்கள்! நடிகை ஐஸ்வர்யா மேனன் அருவிக்கு அருகில் இருந்து கொண்டு போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனனின் அழகான போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஈரோட்டில் பள்ளி படிப்பை முடித்த ஐஸ்வர்யா மேனன், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். யுனிவெர்சிட்டியில் பிடெக் படித்துள்ளார்.
ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அம்மா, மகள் உறவை மையப்படுத்தி இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது.
ஆனால், இந்தப் படம் வருவதற்கு முன்னதாகவே தீயா வேலை செய்யனும் குமாரு படம் வெளியாகியுள்ளது. ஆதலால், ஐஸ்வர்யா மேனனின் முதல் படமாக இது கருதப்படுகிறது.
தமிழைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள மொழியிலும் அறிமுகமாகியுள்ளார். வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது எந்தப் படத்திலும் ஐஸ்வர்யா மேனன் கமிட் ஆகவில்லை. ஆனால், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆம், அருவிக்கு அருகில் இருந்தபடி, இவர் செய்துள்ள போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், டுவிட்டரில் ஐஸ்வர்யா மேனனின் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.