Home சினிமா கோலிவுட் சலூன் கடை எப்போ திறப்பாங்களோ? மகனுக்கு முடிவெட்டி விட்ட ஜெயம் ரவி!

சலூன் கடை எப்போ திறப்பாங்களோ? மகனுக்கு முடிவெட்டி விட்ட ஜெயம் ரவி!

296
0
Jayam Ravi

Jayam Ravi; சலூன் கடை எப்போ திறப்பாங்களோ? மகனுக்கு முடிவெட்டி விட்ட ஜெயம் ரவி! கொரோனா லாக்டவுன் காரணமாக சலூன் கடை மூடப்பட்டுள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மகனுக்கு முடி வெட்டி விட்டுள்ளார்.

தனது மகனுக்கு முடி வெட்டி விட்ட ஜெயம் ரவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை சலூன் கடை திறக்கப்படவில்லை. வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எப்போது சலூன் கடை திறக்கப்படும் என்றும் தெரியவில்லை. கடை திறக்கப்படாததால், ஆண்கள் தலையில் அதிக முடியுடனும், தாடியுடனும் தோற்றமளிக்கின்றனர்.

மேலும், குழந்தைகளும் அதிகளவில் முடி வளர்த்து வருகின்றனர். முடி வெட்டி விடுவதற்கு ஆள் இல்லாமல், அவர்களது பெற்றோர்களே முடி வெட்டி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்விற்கு முடி வெட்டி விட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி மட்டுமல்ல, பிரபலங்கள் பலரும் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்மார்களுக்கும் முடி வெட்டி விட்டுள்ளனர்.

மாறாக பெண் பிள்ளைகளும் தங்களது அப்பாக்களுக்கு முடி வெட்டி விடுகின்றனர். இவ்வளவு ஏன், நடிகை மனிஷா யாதவ் தனது காதல் கணவருக்கு முடி வெட்டி விட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரவ் தன் அப்பாவின் டிக் டிக் டிக் படத்தில் அவருக்கு மகனாகவே நடித்திருந்தார். ஜெயம் ரவி நடிப்பில் பூமி, ஜனகணமன மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅடக்கம் ஒடுக்கத்துக்கு பேர் போன கீர்த்தி சுரேஷ்: #WeLoveKeerthySuresh டிரெண்டிங்!
Next articleகொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி வாழ தன்னை மாற்றியமைத்துள்ளது: விஞ்ஞானிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here