FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு ஜெயம் ரவி நிதியுதவி! நடிகர் ஜெயம் ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
ஜெயம் ரவி FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
FEFSI தொழிலாளர்களுக்கு ஜெயம் ரவி நிதியுதவி…
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வணி, சினிமா தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த நிதியுதவியோ அல்லது அரிசி மூட்டையோ வழங்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் வைத்திருந்தார்.
அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சூர்யா குடும்பத்தினர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், ரஜினிகாந்த், மனோ பாலா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி ஆகியோர் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கினர்.
இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.5 லட்சத்தை FEFSIக்கு வழங்கியுள்ளார்.
தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன், ஜன கண மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.