Home சினிமா கோலிவுட் சூரியின் கமகமக்கும் பிரியாணியை காரி துப்பிய அவரது மனைவி!

சூரியின் கமகமக்கும் பிரியாணியை காரி துப்பிய அவரது மனைவி!

408
0
Soori Cook Biryani Video

Soori Biryani Video; சூரியின் பிரியாணியை காரி துப்பிய அவரது மனைவி! சூரி செய்த பிரியாணியில் அளவுக்கு அதிகமாக உப்பு இருந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி காரி துப்பியுள்ளார்.

சூரி செய்த கம கமக்கும் பிரியாணி…

சூரி பிரியாணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாகவே உலகம் முழுவதும் அறியப்பட்டார். அதோடு, பரோட்டா சூரி என்றும் அழைக்கப்பட்டார்.

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு முன்பாக, மறு மலர்ச்சி, நினைவிருக்கும் வரை, சங்கமம், ஜேம்ஸ் பாண்டு, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, ரெட், வின்னர், வர்ணஜாலம் என்று ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.

ஆனால், எந்தப் படமும் அவரது கதாபாத்திரம் பற்றி பேசவில்லை. தற்போது உலகத்தையே தனது கதாபாத்திரம் மூலம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், சமுத்திரகனி என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், நடித்து வருகிறார்.

இவ்வளவு ஏன், ஒரு காமெடியனாக ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூரி ஒரு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

காமெடியன்கள் ஹீரோ ரோலில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு ஆகியோர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள் தான்.

அவர்களது வரிசையில், தற்போது சூரியும் இணைந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது.

இந்த நிலையில், காமெடி நடிகர் சூரி தனது மனைவிக்கு ஆசை ஆசையாய் பிரியாணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சூரிக்கு உதவியாக அவரது மகன் சர்வாண் மற்றும் மகள் வெண்ணிலா ஆகியோரும் இருந்தனர். அவர்கள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து தயார் செய்தனர்.

அப்போது அங்கு வந்த சூரியின் மனைவியை பிரியாணி ருசி பார்க்க சொல்லியிருக்கிறார். அவரோ, தனது கணவர் ஆசையோடு செய்தது என்றும் ருசி பார்த்திக்கிறார்.

அதன் பிறகுதான் தெரிந்திருக்கிறது பிரியாணியில் ஒரே உப்பு. உடனே காரி துப்பிவிட்டு, உப்பாக இருக்கிறது என்றிருக்கிறார்.

இதற்கு சூரி, கறிக்குப் பதிலாக ஏன் உப்பை எடுத்து வாயில் வச்ச என்று கமெண்ட்டும் கொடுத்துள்ளார். பிறகு அவரே ருசி பார்க்கும் போது தெரிந்தது. பிரியாணி நல்லாவே இல்லை என்று.

இதையடுத்து, தனது மகன், மகளைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதற்கு முன்னதாக தனது மகன், மகளுடன் இணைந்து சூரி கொரோனா வீடியோ பதிவிட்டிருந்தார்.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா பரவ காரணம் முஸ்லீம்.. முஸ்லீம்.. – அரசே சொல்ல என்ன காரணம்?
Next articleFEFSI தொழிலாளர்களுக்கு ஜெயம் ரவி நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here