Home சினிமா கோலிவுட் தனி ஒருவன் 2 எப்போது தொடங்கப்படும்? ஜெயம் ரவி அறிவிப்பு!

தனி ஒருவன் 2 எப்போது தொடங்கப்படும்? ஜெயம் ரவி அறிவிப்பு!

268
0
Thani Oruvan

Thani Oruvan 2; தனி ஒருவன் 2 எப்போது தொடங்கப்படும்? ஜெயம் ரவி அறிவிப்பு! தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தனி ஒருவன்.

ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து ஜெயம் ரவி தகவல் தெரிவித்துள்ளார்.

தனது நடிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன், பூமி, ஜனகணமண ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அண்மையில், தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனி ஒருவன் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் அனைத்தையும் எழுதி முடித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

மேலும், தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொன்னியின் செல்வன், பூமி, ஜனகணமண ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரொனா சூழல் சரியான பிறகு இந்தப் படங்களின் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவிஷாலின் அதிரடி ஆக்‌ஷனில் வெளிவரும் சக்ரா டிரைலர்!
Next articleகொல்லவும் செய்வோம்: செய்து காட்டிய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here