Nellai Bharathi Passed Away: பத்திரிக்கையாளர், பாடலாசிரியர் நெல்லை பாரதி மறைவு: விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி! மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி மறைவுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி (Nellai Bharathi) நேற்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
எழுத்தாளர், சினிமா பாடலாசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் என்று பல திறமைகளைக் கொண்டவர் நெல்லை பாரதி.
முதலில் மாணவ பத்திரிக்கையாளராக பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் பின், இயக்குநரும், நடிகருமான டி ராஜேந்தர் நடத்திய உஷா பத்திரிக்கையில் பணியாற்றினார்.
தொடர்ந்து தனது முயற்சியால் பல முன்னணி இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றிய நெல்லை பாரதி, சினிமாவில் பல படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நெல்லை பாரதி நேற்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை பாரதி தனது கடைசி காலத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை பாரதியின் மறைவு செய்தி அறிந்த விஜய் சேதுபதி அவரது வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் (Vijay Sethupathi visit Nellai Bharathi House) என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒருசிலர் மட்டுமே நெல்லை பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.