நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் ஏன் கட்டினார்கள்? அதற்கு பதிலாக மருத்துவமனை கட்டியிருக்கலாம் எனக் கூறியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆகி உள்ளது.
உண்மையில் ஜோதிகா அந்த விருது நிகழ்ச்சியில் என்ன பேசினார். அவர் கோவில் கட்ட வேண்டாம் எனக் கூறினாரா?
ஜோதிகா வீடியோவில் பேசியதாவது. “பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. அதை பார்க்காமல் போகாதீர்கள் என்றார்கள்.
ஏற்கனவே நான் பெரிய கோவிலை பார்த்துள்ளேன். அவ்வளவு அழகாக உள்ளது. உதய்ப்பூரில் உள்ள அரண்மனை போல் நன்கு பராமரித்து வருகிறார்கள்.
அடுத்தநாள் மருத்துவமனையில் என்னுடைய படப்பிடிப்பு. அது சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது எனக் கூறினார்.”
மேலும், ராட்சசி படத்தில் பேசிய வசனத்தையும் சுட்டிக்காட்டினார். எல்லோருக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோயிலுக்கு அவ்வளவு காசு கொடுக்கிறீர்கள். உண்டியலில் பணம் போடுகிறீர்கள். பெயிண்ட் அடிக்கிறீர்கள். கோயிலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள் . தயவுசெய்து அதே காசை கட்டடத்துக்கு கொடுங்கள். பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். எனக் கூறி முடித்தார்.
அவர் ராட்சசி படத்தில் பேசிய வசனைத்தையே மீண்டும் மேடியையில் சுட்டிக்காட்டி பேசினார். கோவிலுக்கு கொடுக்கும் அதே காசை மருத்துவமனை பள்ளி கட்ட கொடுங்கள் என்று தான் கூறி உள்ளார். கோவிலுக்கு காசு கொடுக்காதே எனக் கூறவில்லை.
ஆனால் சமூக வலைதளங்களில் இந்த கருத்து தவறான முறையில் பரப்பி விட்டு ஜோதிகாவிற்கு எதிராக திருப்பிவிட்டனர்.
ராட்சசி படம் வெளியான போது இந்த கேள்வியைக் கேட்காதவர்கள் இப்போ கேட்க என்ன காரணம் எனத் தெரியவில்லை?
ஜோதிகா பேசிய முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.