Ka Pae Ranasingam Teaser; தண்ணீர், காற்றை வைத்து தான் இனி அரசியல்: க/பெ.ரணசிங்கம் டீசர்! விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
க/பெ.ரணசிங்கம் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு க/பெ.ரணசிங்கம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.
இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு க/பெ.ரணசிங்கம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போஸ்டர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கை விலங்கு போடப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
இருவருக்கும் பின்புறம் காலிக்குடங்களுடன் பெண்களும் வயதானவர்களும் இருப்பது போன்று க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மைக் கதையைக் கொண்ட இந்தப் படம் நீதி, நேர்மை, நியாயம், சரி எது, தவறு எது, சமத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த டீசரில், சாதி. மத அரசியலைத் தாண்டி இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துதான் மொத்த உலக அரசியல் நடக்கும் என்று விஜய் சேதுபதி அரசியல் வசனம் பேசியுள்ளார்.
2000 பேருக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு, விவசாயம் செய்து கொண்டிருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிற்கவைத்தால் எப்படி? நம்ம ஊரு பெண்கள் தண்ணீர் வண்டி தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த கெண்ட் கம்பெனிகாரன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கிறான். அதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.
மொத்தத்தில் இந்த டீசர், தண்ணீர், ரேஷன் கார்டு, விவசாயம் ஆகியவற்றிற்காக போராடும் ஒரு கிராமத்தைச் சுற்றிய படமாக இருக்கும் என்று காட்டுகிறது.
இதில், விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. குழந்தையும் பிறக்கிறது. போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டு விஜய் சேதுபதி கிரிமினலாக நீதிமன்றத்தின் முன்பு நிற்கிறார்.
அவர் சிறைக்கு சென்றாரா? அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றியெல்லாம் க/பெ.ரணசிங்கம் விளக்கிக்கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.