Home ஆன்மிகம் சரஸ்வதி கோவில்: அத்தி மரத்தடியில் அமைந்துள்ள சேலம் சரஸ்வதி (சாரதாம்பாள்) ஆலயம்!

சரஸ்வதி கோவில்: அத்தி மரத்தடியில் அமைந்துள்ள சேலம் சரஸ்வதி (சாரதாம்பாள்) ஆலயம்!

600
2

சரஸ்வதி கோவில்: அத்தி மரத்தடியில் அமைந்துள்ள சாரதாம்பாள் (சரஸ்வதி தேவி) ஆலயம், காமதேனுவிற்கு தனி சன்னதி உள்ள ஆலயம், ஞானத்தை வழங்கும் அத்தி மரம்.

ஞானத்தின் வடிவமான அன்னை சரஸ்வதி தேவி “சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி” என்று நாமங்கள் கொண்டு அஞ்ஞான இருளை அகற்றி ஞானத்தை புகட்டும் தாயாக இருந்து மக்களை காத்து வருகிறாள்.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதருக்கு இந்த சரஸ்வதி தேவியே “சாரதாம்பாள்” என்ற திருநாமத்தில் காட்சி அளித்தாள். எனவே தான் அவளது திருநாமத்தில் சிருங்கேரியில் தனது முதல் பீடமான சாரதா பீடத்தை நிறுவினார்.

ஞானத்தின் பிறப்பிடமாக சாரதா பீடம் திகழ்கிறது. துங்கபத்ரா நதிக்கரையில் அமர்ந்து அன்னை சாரதா தேவி தன் குழந்தைகளுக்கு நல்லறிவையும், ஞானத்தையும் பொழிகிறாள்.

மேலும் சிருங்கேரி மட்டுமன்றி இந்தியாவில் பல பகுதிகளில் சாரதா பீடத்திற்கு பாத்தியப்பட்ட உப கோவில்களை அமைத்து அன்னை சாரதாம்பிகையை பிரதிட்டை செய்து அனைவரும் அவரவர் ஊரிலேயே அவளை தரிசிக்கும் வண்ணம் பல சாராதாம்பிகை கோவில்கள் அமைத்துள்ளனர்.

அந்த வகையில் வேறெங்கும் காண இயலாத வகையில் அத்திமரத்தடியில் அமர்ந்து அன்னை சாரதாம்பாள் அருள்புரியும் திவ்ய திருக்கோவில் தமிழகத்தில் தான் உள்ளது.

அத்திமரத்தடியில் சாரதாம்பாள் (சரஸ்வதி)

மலைகள் நிறைந்த மாங்கனி நகரமாம் சேலம் மாநகரில் அன்னை சாரதாம்பாள் ஞானத்தை வழங்கும் பிரம்ம ஸ்வரூபமான அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்.

அத்தி மரம் பிரம்ம ஸ்வரூபம் மேலும் அதற்கு ஆகர்சன சக்தி அதிகம் எனவே தான் இன்றும் அனைத்து கோவில் பாலாலயத்தின் போதும் அத்தி மரத்தால் ஆன பலகை அல்லது சிலையில் மூல விக்ரஹத்தின் சக்தியை ஏற்றுவர்.

அந்த அளவிற்கு அத்தி மரம் சிறப்பு வாய்ந்ததும், மூலிகை குணம் மிகுந்த மரம் என்பது அறிய முடிகிறது. சமீபத்தில் கூட காஞ்சியில் அத்திமரத்தால் ஆன அத்தி வரதரை தரிசித்து மகிழந்தோம்.

அத்தி விருட்சமானது பிரம்மாவின் வடிவமாகவே கருதப்படுகிறது. அதீத மகத்துவம் நிறைந்த இந்த பிரம்மத்தின் கீழ் அன்னை சரஸ்வதி தேவி சாரதையாக அமர்ந்து ஞானத்தை வழங்கி வருகிறாள்.

சேலம் சிருங்கேரி சாரதாம்பாள் பீடம்

சிருங்கேரி சாரதா பீடத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவில் சேலம் சாரதாம்பாள் ஆலயம் ஆகும். தற்கால சுதை சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ள அழகிய அற்புதமான ஆலயம்.

நகரின் மைய பகுதி ஆனாலும் சுற்றிலும் மரங்கள் நிறைந்து குளிர்ச்சி நிறைந்த ஆலயம் ஆகும். பெரிய அத்தி மரத்தின் கீழ் அம்பிகை கோவில் கொண்டு உள்ளார்.

கருவறையின் வலப்புறம் ஸ்ரீ கணபதி சன்னதி, இடப்புறம் ஜகத்குரு ஆதிசங்கர பகவத் பாதர் சன்னதி. இரண்டிற்கும் நடுவே நடுநாயகமாக அன்னை சாரதாம்பிகை அமர்ந்து அருட்காட்சி புரிகிறாள்.

சிருங்கேரியை போலவே பஞ்ச லோகத்தில் ஆன திருவுருவம். கருணையே வடிவாக அமிர்த்த கலசம், ஜபமாலை, ஓலைச்சுவடி தாங்கி சின்முத்திரை கொண்டு மாகா பாரதியாக அம்பிகை காட்சி தருகிறாள்.

அம்பிகைக்கு இடப்புறம் தென் மூலையில் பைரவர் காவல் புரிகிறார். கோவிலை வளம் வந்தால் பின்புறம் உள்ளது அகன்று விரிந்த அத்தி மரம்.

அத்தி மரத்தின் அடியில் கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக “காமதேனு” சன்னதி உள்ளது. காமதேனுவையும் அத்தி மரத்தையும் ஒரு சேர சுற்றி வருவது மிகவும் சிறப்பான ஒன்று.

திருச்சுற்று முடிவில் நவகிரக நாயகர்கள் சன்னதி கொண்டுள்ளனர். இங்கே சிருங்கேரியில் நடப்பது போலவே அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது.

செவ்வாய், வெள்ளி நாட்களில் பக்தர்கள் அன்னையை தரிசிக்க நிறைய பேர் வருகின்றனர். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி இங்கே செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

சாரதா நவராத்திரி மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
சிருங்கேரி சென்று அன்னையை தரிசிக்க இயலாத பக்தர்களுக்கு இந்த திருக்கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஞானம் வழங்குவாள் சாரதாம்பிகை

கல்வி கடவுளாக திகழும் சரஸ்வதியே சாரதாம்பாள் ஆவாள். குழந்தைகள் நல்ல அறிவு பெற, புத்தி கூர்மை பெற இங்கே வந்து அன்னையை வணங்கினால் போதும். ஞான பெருஞ்சுடராக குழந்தைகளை ஒளிர செய்வாள் தேவி சாரதாம்பாள்.

வேறு எங்கும் இல்லாத வண்ணம் பிரம்ம ஸ்வரூபமான அத்தி மரத்தின் நிழலில் அமர்ந்து காட்சி தருவதால் இன்னமும் விசேடமாகும்.

அனைவரும் சேலம் சென்றால் தவறாமல் குழந்தைகளுடன் அன்னை சாரதாம்பாள் பீடத்தை தரிசித்து ஞானம் என்கிற நீங்காத செல்வத்தை பெற்று சிறப்புடன் வாழ்வோம்.

அமைவிடம்: ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், லிவ்-ஓ காலனி, இரண்டாவது அக்ரஹாரம், சேலம் – 636001

Previous articleநேற்று தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா தொற்று
Next articleதண்ணீர், காற்றை வைத்து தான் இனி அரசியல்: க/பெ.ரணசிங்கம் டீசர்!

2 COMMENTS

  1. This temple remember to me aver school days memorys bava, so many time we are go with aver frnds to this temple. Another one special is there near by that temple opposite Nagalingam flower tree is there, I like your all article’s nice effort bava. Congratulations and keep it up..! Bava Deva Bharathi 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here