Home சினிமா கோலிவுட் காதல் கொண்டேனில் முத்திரை பதித்த சோனியா அகர்வால் பிறந்தநாள் டுடே!

காதல் கொண்டேனில் முத்திரை பதித்த சோனியா அகர்வால் பிறந்தநாள் டுடே!

469
0
Sonia Agarwal

காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை சோனியாக அகர்வால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 1982 ஆம் ஆண்டு 28 ஆம் தேதி பிறந்தார்.

பள்ளிப்படிப்பின் போது ஜீ தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பிறகு கடந்த 2002 ஆம் ஆண்டு Nee Premakai என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கன்னடத்தில் சுதீப் நடிப்பில் வந்த Chandu என்ற படத்தில் நடித்தார்.

வரிசையாக தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் அறிமுகமான பின்னர் தமிழிலும் காதல் கொண்டேன் படத்தின் மூலமாகவே அறிமுகமானார்.

இப்படத்தில், தனுஷைப் பார்த்து கல்லூரி நண்பர்கள் பயப்படும் போது, சோனியா அகர்வால் மட்டும் அவரிடம் நெருங்கிப் பழகி அவர் மீது அதிக பாசம் காட்டினார்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. காதலும் மலர்ந்தது. ஆம், காதல் கொண்டேன் படத்தை இயக்கிய தனுஷின் சகோதரர் செல்வராகவன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

செல்வராகவனும், சோனியா அகர்வாலும் 4 ஆண்டுகளாக காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் சுமூகமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் இவர்களது குடும்ப வாழ்க்கையில் ஆண்ட்ரியா நுழைந்துள்ளார்.

ஆம், செல்வராகவனும், ஆண்ட்ரியாவும் நெருங்கி பழகியதால், இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று 2010 ஆம் ஆண்டு பிரிந்தும் விட்டனர்.

திருமணத்திற்கு முன்னதாக சக்சஸ், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை,  ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே,  புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை சினிமாவில் நடிக்க வில்லை. விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஹீரோயின் ரோல் கிடைக்கவில்லை. எனினும், குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

வானம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த சோனியா அகர்வாலுக்கு சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன், சாயா, எவனவன், தடம், தனிமை, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், எதுவுமே அவரது கதாபாத்திரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இல்லை.

தற்போது மலையாளத்திலும், தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது 38 வயதாகும் சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சோனியா அகர்வாலுக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா: இந்த ஜோதிடர் சொல்லுவது எல்லாம் அப்டியே நடக்குதே
Next articleஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? கொக்கி குமாரு இஸ் பேக்: புதுப்பேட்டை 2 மோஷன் போஸ்டர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here