Home சினிமா கோலிவுட் சூர்யா பர்த்டே ஸ்பெஷல்: காட்டுப்பயலே வீடியோ சாங் வெளியீடு!

சூர்யா பர்த்டே ஸ்பெஷல்: காட்டுப்பயலே வீடியோ சாங் வெளியீடு!

331
0
Kaattu Payale Promo Video Song

Kaattu Payale Promo Video Song; சூர்யா பர்த்டே ஸ்பெஷல்: காட்டுப்பயலே வீடியோ சாங் வெளியீடு! சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே என்ற ஒரு நிமிட வீடியோ புரோமோ வெளியாகியுள்ளது.

காட்டுப்பயலே பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர், தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில், ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த மே மாதமே இந்தப் படம் திரைக்கு வர வேண்டியது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

கொரோனா முற்றிலும் சரியான பிறகு சூரரைப் போற்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யா இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்ற காட்டுப்பயலே என்ற பாடலின் ஒரு நிமிட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மேலும், இருவரும் மணக்கோளத்தில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இதில், இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அப்போது பாடும் பாடலே இந்த காட்டுப்பயலே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக, #KaattuPayale என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here