Kajal Aggarwal; ஹோட்டலில் சாப்பிடுங்க, செப்பல், காய்கறி பழம் வாங்குங்க: காஜல் அகர்வால் புதிய யோசனை! கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹோட்டலில் சாப்பிடுங்க, செப்பல், காய்கறி பழம் வாங்குங்க என்று நடிகை காஜல் அகர்வால் புதிதாக யோசனை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் (COVID19) பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதும் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லவொரு யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 111 பேர் லியாகியுள்ளனர். மேலும், 3,851 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? இல்லை வேறு தீர்வு ஏதும் கிடைக்குமா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து காஜல் அகர்வால் புதிதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நம் விடுமுறையை உள்நாட்டில் களிக்கலாம். உள்ளூர் ஹோட்டல்களிலேயே சாப்பிடலாம்.
நமது நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கலாம். அதோடு, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம்.
அப்படி செய்வதன் மூலம் நம் நாட்டு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் நாடு மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.