Home சினிமா கோலிவுட் இப்போதுமே சிங்கிள்தான்: காதலா எனக்கா? பிந்து மாதவி கூல் பதில்!

இப்போதுமே சிங்கிள்தான்: காதலா எனக்கா? பிந்து மாதவி கூல் பதில்!

257
0
Bindhu Madhavi Love Feelings

Bindhu Madhavi; இப்போதுமே சிங்கிள்தான்: காதலா எனக்கா? பிந்து மாதவி கூல் பதில்! கொரோனா ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருக்கும் நடிகை பிந்து மாதவி தனது காதல் அனுபவம் பற்றி ரசிகர்களிடையே உரையாடியுள்ளார்.

நடிகை பிந்து மாதவி தனது காதல் அனுபவம் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

கழுகு படத்தின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை பிந்து மாதவி. ஆனால், பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கழுகு படத்தில் உள்ள காதல் இன்றும் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கழுகு படத்தைத் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பதோடு, மாடலிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். தற்போது, மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், சினிமாவில் அறிமுகமானது என்னவோ Avakai Biryani என்ற தெலுங்கு படம்தான். ஆனால், அந்த படத்தைத் தவிர ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துள்ளார். ஆனால், அதை தமிழ் படங்களில் அதிகளவில் நடித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிந்து மாதவிக்கு தமிழ் சினிமா நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருக்கும் பிந்து மாதவி ரசிகர்களிடையே உரையாடினார்.

அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், காதலில் விழுந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு எந்த கோபமும் இல்லாமல் கூலாக பதிலளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், ஒருவர் மீது எனக்கு கிரஷ் இருந்தது. ஆனால், அதை யாரிடமும் சொன்னது கிடையாது. இதற்கு காதல் என்று அர்த்தம் இல்லை.

நான் காதலிக்கிறேன் என்றும் கூறிவிட முடியாது. நான் யாரிடமும் காதலிக்கிறேன் என்று சொன்னது கூட கிடையாது.

அதே போல் திருமண கமிட்மெண்டுக்கும் ஆளாகவில்லை. இப்போது வரை சிங்கிளாகவே இருக்கிறேன் என்று பெருமையாக கூறியுள்ளார்.

தற்போது 33 வயதாகும் பிந்து மாதவி திருமணம் குறித்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleநடிகர் புல்லட் பிரகாஷ் காலமானார்
Next articleஹோட்டலில் சாப்பிடுங்க, செப்பல், காய்கறி பழம் வாங்குங்க: காஜல் அகர்வால் புதிய யோசனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here