Home சினிமா கோலிவுட் வேட்டையாடு விளையாடு 2வில் கமல் – கவுதம் மேனன் கூட்டணி!

வேட்டையாடு விளையாடு 2வில் கமல் – கவுதம் மேனன் கூட்டணி!

303
0
Kamal Haasan Vettaiyaadu Vilaiyaadu

Kamal Haasan; கமல் ஹாசன் இயக்குநர் கவுதம் மேனன் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு 2 உருவாக இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Vettaiyaadu Vilaiyaadu 2; வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு (Vettaiyaadu Vilaiyaadu 2). இப்படத்தில் கமல் ஹாசன், ஜோதிகா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர்.

இவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, கமாலினி ஆகியோரும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த பார்த்த முதல் நாளே பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வந்தது.

வேட்டையாடு விளையாடு படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளாது.

அண்மையில், ஜீவா நடிப்பில் வந்த ஜிப்ஸி படத்தைப் பார்த்த கமல் ஹாசன் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

அப்போது கவுதம் மேனனும் (Gautham Menon), கமல ஹாசனும் (Kamal Haasan) சந்தித்து பேசியுள்ளனர். அதில், வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தேவர் மகன் 2 படமும் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு தலைவர் இருக்கின்றான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர்169 படத்தை கமல் ஹாசன் தயாரிக்க இருக்கிறார்.

கமலின் சபாஷ் நாயுடு படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதே போன்று கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்ட பல தடைகளைத் தாண்டி திரைக்கு வந்தது.

துருவ நட்சத்திரம் படமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், மீண்டும் இணைந்துள்ள கமல் – கவுதம் மேனன் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு 2 படம் எப்போது உருவாகும் என்பது கேள்விக்குறி. எனினும் இது குறித்து அறிவிப்பு வந்தது சந்தோஷமான விஷயம்.

SOURCER SIVAKUMAR
Previous articleமாஸ்டர் இசை வெளியீடு இங்குதான் நடக்கிறது: இதோ அழைப்பிதழ்!
Next articleடுவிட்டரில் டிரெண்டாகும் #2DaystogoForMasterAudioLaunch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here