Home சினிமா கோலிவுட் கறாரான காக்கி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

கறாரான காக்கி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

305
0
Karaarana Khakki Song Lyrical

Karaarana Khakki Song கறாரான காக்கி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிசி 376 படத்தின் கறாரான காக்கி பாடலின் லிரிக் (Karaarana Khakki Song) வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிசி 376 (IPC 376) இயக்குநர் ராம்குமார் சுப்பராமன் இயக்கத்தில் நந்திதா நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் படம். எஸ் பிரபாகர் இப்படத்தை தயாரிக்கிறார்.

அட்டகத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, தேவி 2, 7 என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ஐபிசி 376 என்ற போலீஸ் கதையில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமலே நடித்துள்ளதாக நந்திதாவே தெரிவித்துள்ளார்.

ஐபிசி 376ம் படத்தில் மதுசூதன் ராவ், மகாநதி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். யாதவ் ராமலிங்கம் படத்திற்கு இசையமைக்கிறார்.

கறாரான காக்கி (Karaarana Khakki Song Lyrical)

இந்த நிலையில், ஐபிசி 376 படத்தில் இடம்பெற்றுள்ள போலீஸ் பாடலான கறாரான காக்கி பாடலின் லிரிக் (Karaarana Khakki Song Lyrical) வீடியோ வெளியாகியுள்ளது.

கறாரான காக்கி (Karaarana Khakki Song Lyrical) பாடலின் போது நந்திதா சண்டைக் காட்சியில் ஈடுபட்டுள்ளது போன்று காட்டப்பட்டுள்ளது.

கறாரான காக்கி பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடலை மெட்ரான் மாறன் எழுதியுள்ளார். கானா பாலசந்தர் கறாரான காக்கி பாடலை பாடியுள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு கறாரான காக்கி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here