Home சினிமா கோலிவுட் 11 வருடத்திற்குப் பிறகு பிரபலமாகும் கரண்: டிக் டாக்கில் பொத்தி வச்ச ஆசை பாடல்!

11 வருடத்திற்குப் பிறகு பிரபலமாகும் கரண்: டிக் டாக்கில் பொத்தி வச்ச ஆசை பாடல்!

0
851
Pothi Vacha Aasai Ellam Tik Tok Video

Pothi Vacha Aasai Ellam Tik Tok Video; 11 வருடத்திற்குப் பிறகு பிரபலமாகும் கரண்: டிக் டாக்கில் பொத்தி வச்ச ஆசை பாடல்! 11 வருடத்திற்குப் முன் கரண் நடிப்பில் வந்த படத்தின் பாடல் ஒன்று தற்போது டிக் டாக் வீடியோவில் டிரெண்டாகி வருகிறது.

11 வருடத்திற்குப் பிறகு கரண் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமாகி வருகிறார். ஆம், அவரது படத்தில் வந்த பாடல் டிக் டாக் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் எம்பி கோபி இயக்கத்தில் கரண், ஷம்மு, உதயதாரா, சரத் பாபு, கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடிப்பில் வந்த படம் மலையன்.

கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பொத்தி வச்ச ஆசை எல்லாம் Pothi Vacha Aasai Ellam Tik Tok Video என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அப்பாவி ஜனங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற மலையன் படம் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின்  மூன்று விருதுகளை வாங்கியது.

தற்போது இந்த படம் திரைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பொத்தி வச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குதய்யா என்ற பாடல் வரிகள் டிக் டாக்கில் டிரெண்டாகி வருகிறது.

ஆம், பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் கரணுக்கு ஜோடியாக நடித்த ஷம்மு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரைப் பற்றி பாடும் பாடலாக இந்த பொத்தி வச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குதய்யா என்ற பாடல் படத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடலை தற்போது கொரோனாவால் பிரிந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தங்களது கணவன்களை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்து கொண்டு மனைவிமார்கள் டிக் டாக் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்தப் பாடலை பார்க்கும் போதே நம் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் என்ன எத்தனை வருடங்கள் ஆனாலும் இது போன்ற பாடலுக்கு ஈடு இணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Karan Starrer Malayan Movie Song Pothi Vacha Aasai Ellam Trending in Tik Tok

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here