Karnan Title First Look; தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்: கர்ணன் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது, நடிகர் என்பதையும் தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.
அண்மையில், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், அசுரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
கர்ணன் படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, லால் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
கர்ணன் என்றால் அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கர்ணன் படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். அதன்படி, கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு, தனுஷின் பிறந்தநாளுக்காக காமென் டிபியும் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.