Karthika Nair; அய்யோ கரண்ட் பில் ஒரு லட்சமா? கொந்தளித்த நடிகை கார்த்திகா நாயர்! கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஒரு லட்சம் கரண்ட் பில் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.
கரண்ட் பில் ஒரு லட்சம் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் தெரிவித்துள்ளார்.
ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இவர், நடிகை ராதாவின் மகள்.
கோ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அண்ணக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வா டீல் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது.
அதன் பின் போடப்பட்ட மின் கட்டணம் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நடிகை கார்த்திகா நாயர் அதிக மின் கட்டணம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னவிதமான மோசடியை மும்பையில், செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஜூன் மாதம் மட்டும் மின் கட்டணம் ஒரு லட்சம் வந்துள்ளது. மும்பையில் இருக்கும் மற்றவர்களிடம் இருந்து இது போன்று புகார்கள் வந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.