Kasthuri Twitter Page; டுவிட்டரிலிருந்து விலகிய கஸ்தூரி? இதுதான் காரணமா? எப்போதும் டுவிட்டரில் பிஸியாக இருக்கும் நடிகை கஸ்தூரி தற்போது அதிலிருந்து விலகி ஃபேஸ்புக் பக்கத்தில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
டுவிட்டரிலிருந்து நடிகை கஸ்தூரி விலகியுள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை வரிசையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால், அதன் பிறகு அவருக்கு தமிழில் சினிமா வாய்ப்பு இல்லை. அப்போது தான் மலை மலை என்ற படத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பினார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு வந்த தமிழ் படத்தில் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடினார். இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார்.
தொடர்ந்து, நாட்டு நடப்பு, அஜித், விஜய், தமிழக அரசியல் குறித்து விமர்சனம் செய்து வந்தார். மற்றவர்களைப் பற்றி பேசி தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
நெட்டிசன்களிடையே விமர்சனத்திற்கும் உள்ளானார். அஜித், விஜய் ரசிகர்களிடையே டுவிட்டர் வாயிலாக வாக்கு வாதத்திலும் ஈடுபட்டு தன்னை பெரியாளாக்கிக் கொண்டார்.
டுவிட்டர் வாயிலாக அதிகளவில் பிரபலமடைய சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கஸ்தூரி நடிப்பில் தமிழரசன் என்ற படம் உருவாகி வருகிறது. தொலைக்காட்சியிலும் வலம் வந்துள்ளார். 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொலைக்காட்சியில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இப்படி ஒரேடியாக டுவிட்டர் வாயிலாக பிரபலமான நடிகை கஸ்தூரி, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், டுவிட்டரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அது கொஞ்ச நாட்களுக்காக? இல்லை நிரந்தரமாகவா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
எனினும், அவர் தற்போது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆக்டிவாக இருக்க கிளம்பிவிட்டார். ஆம், தொடர்ந்து தனது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
அதோடு, லாக்டவுன் நேரத்தில் மட்டர் பன்னீர் செய்து அதை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.