Katrina Kaif Swimming With Shark; சுறாவுடன் நீந்திய கத்ரீனா கைஃப்: வைரலாகும் வீடியோ! பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சுறாவுக்கு இணையாக நீந்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கத்ரீனா கைஃப் சுறாவுடன் நீந்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். முன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது கிசுகிசுவில் சிக்குவது உண்டு. ஆனால், அதையெலலாம் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.
தனது முதல் படத்திலேயே அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.
எப்போதும், சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர். தனது ஹாட்டான புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது, சுறாவுடன் நீச்சல் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுறாவை கண்டால் அனைவரும் தெறித்து ஓடும் நிலையில், கத்ரீனா கைஃப் மட்டும் சர்வ சாதாரணமாக சுறாவிற்கு இணையாக நீச்சல் செய்துள்ளார்.
சுறாவிற்கு இணையாக நீச்சம் செய்யும் கத்ரீனா கைஃப்பின் துணிச்சலை பிரபலங்கள் பலரும் பாராட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.