காவல்துறை உங்கள் நண்பன்: ராணி தேனி பாடல் வெளியீடு!
Kavalthurai Ungal Nanban Songs; காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் ராணி தேனி பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
ராணி தேனி பாடல் (Rani Theni Lyric) லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
சும்மா பேருக்கு நாம் எல்லோரும் சொல்வது காவல்துறை உங்கள் நண்பனென்று. ஆனால், உண்மையில் அப்படியா என்று கேட்டால் 100க்கு 99 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் சொல்வார்கள்.
மாறாக, காவல்துறை உங்கள் எதிரி என்று வேண்டுமென்றால் கூறிக்கொள்வோம். இந்த நிலையில், காவல்துறை உங்கள் நண்பன் என்று புதிய படம் உருவாகி வருகிறது.
இயக்குநர் ஆர்டிஎம் (RDM) இயக்கத்தில் விஜே சுரேஷ் ரவி, டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர்.
வழக்கம் போல், சாதாரண ஒரு நடுத்தர இளைஞருக்கும், மோசமான போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டமே இப்படம். (Kavalthurai Ungal Nanban Song).
போலீஸ் அதிகாரியாக மைம் கோபி நடித்துள்ளார். இப்படத்தை பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஒயிட்மூன் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் பாஸ்கரன், ராஜபாண்டியன், சுரேஷ் ரவி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ராணி தேனி பாடல் (Rani Theni Lyric)
இப்படத்திற்கு ஆதித்யா – சூர்யா இசையமைத்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ராணி தேனி பாடல் லிரிக் (Kavalthurai Ungal Nanban First Single) வீடியோ வெளியாகியுள்ளது.
இதனை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், படக்குழுவினருக்கு வாழத்து தெரிவித்துள்ளார். ஹரிசரன் இந்தப் பாடலை பாடியுள்ளார். ஞானவேல்ராஜா பாடல் வரிகள் அமைத்துள்ளார்.
வரும் 20 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.