Home சினிமா கோலிவுட் டுவிட்டரில் டிரெண்டாகும் Lift ஹேஷ்டேக்: காரணம் தெரியுமா?

டுவிட்டரில் டிரெண்டாகும் Lift ஹேஷ்டேக்: காரணம் தெரியுமா?

320
0
Lift Movie Dubbing

Kavin Lift Dubbing; டுவிட்டரில் டிரெண்டாகும் Lift ஹேஷ்டேக்: காரணம் தெரியுமா? கவின் நடிப்பில் உருவாகி வரும் லிப்ட் படத்தின் டப்பிங்கை அவர் முடித்துக் கொடுத்துள்ளார்.

லிப்ட் படத்தின் டப்பிங்கை கவின் முடித்துக் கொடுத்துள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் வேட்டையனாக வந்தவர் நடிகர் கவின் (Kavin). தொடர்ந்து சத்ரியன் படத்தில் துணை நடிகராக நடித்தார்.

இதையடுத்து, நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எனினும், அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று, தனக்கென்று ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. புதுமுக இயக்குநர் வினீத் இயக்கத்தில் ஏகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் லிப்ட் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் (Amritha Aiyer) ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த நிலையில் லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இத்தனை நாட்களாக கொரோனா லாக்டவுன் காரணமாக கிடப்பில் போடப்பட்ட லிப்ட் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது கவின் தனது டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.

கவின் டப்பிங் பேசும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் படு வேகமாக வைரலாகி வருகிறது. இதன் காரணமாக டுவிட்டரில், #Lift என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஜகமே தந்திரம் ரகிட ரகிட ரகிட பாடல் வரிகள் வெளியீடு!
Next articleநிமிர்ந்து நில், தனி ஒருவன் புகழ் நடிகர் அனில் முரளி திடீரென்று காலமானார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here