Poet Vairamuthu; நிறவெறிக்கு எதிராக பாடல் மூலம் குரல் கொடுத்த கவிஞர் வைரமுத்து! அமெரிக்காவில் நிறவெறியால் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நிறவெறிக்கு எதிராக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகர் பகுதியில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு எனப்வர் வெள்ளை இன போலீஸ் இன அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நிறவெறிக்கு எதிராக நடந்த இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய சினிமா பிரபலங்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கவிஞர் வைரமுத்து, நிறவெறிக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். மேலும், ரமேஷ் தமிழ்மணியே இந்தப் பாடலை பாடவும் செய்துள்ளார்.
தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இதோ உங்களுக்காக:
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை
என்னால் மூச்சு விட முடியவில்லை
என் காற்றின் கழுத்தில்
யார்?
கால் வைத்து அழுத்துவது?
என் சுவாசக் குழாயில்
யார்?
சுவர் ஒன்றை எழுப்புவது?
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை
என்னால் மூச்சுவிட முடியவில்லை……