Home சினிமா கோலிவுட் டிராக்டரில் உழவு ஓட்டும் பிரபல நடிகரின் மகள் கீர்த்தி பாண்டியன்!

டிராக்டரில் உழவு ஓட்டும் பிரபல நடிகரின் மகள் கீர்த்தி பாண்டியன்!

279
0
Keerthi Pandian

Keerthi Pandian; டிராக்டரில் உழவு ஓட்டும் பிரபல நடிகரின் மகள் கீர்த்தி பாண்டியன்! லாக்டவுனில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இளம் நடிகை கீர்த்தி பாண்டியன் விவசாயம் செய்து வருகிறார்.

டிராக்டரில் உழவு ஓட்டும் நடிகை கீர்த்தி பாண்டியனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், தும்பா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஹெலன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகும், இந்தப் படத்தில் அருண் பாண்டியனும் நடிக்கிறார். அப்பா, மகள் பாச உறவை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலையில் நிலையில், கீர்த்தி பாண்டியன் மட்டும் விவசாயம் செய்து வருகிறார்.

ஆம், டிராக்டரை வைத்து உழவு ஓட்டும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு, கொரோனா விடுமுறை என்பதால், சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது தனிமைப்படுத்தப்பட்ட இடம்.

சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று ஆகாது. நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here