Home சினிமா கோலிவுட் நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்? அறம் 2 அப்டேட்!

நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்? அறம் 2 அப்டேட்!

310
0
Keerthy Suresh Aramm 2

Aramm 2: Keerthy Suresh; நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்? அறம் 2 அப்டேட்! அறம் படத்தின் 2 ஆம் பாகத்தில் நயன்தாராவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறம் 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்த படம் அறம்.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனி என்ற கதபாத்திரத்தில் கலெக்டராக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் தான் அறம்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கப் போராடும் மாவட்ட ஆட்சியரின் கதை தான் இந்தப் படம். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து, அறம் 2 எடுக்க தன்னை தயார்படுத்தி வருவதாக இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார். இந்த நிலையில், அறம் 2 படத்தின் நயன் தாராவுக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால், தான் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அறம் 2 படத்தில் வேறு எந்த நடிகையையும் நடிக்க வைக்க விரும்பவில்லை. நயன்தாராவைத் தான் நடிக்க வைக்க இருப்பதாக இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.

Previous articleபேட்மேன் பட இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம்!
Next articleசில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here