Miss India Release Date; கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், விக்ரம் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் (மகாநடி) என்ற படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்றார்.
இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தது.
இதில், ஜோதிகா, நந்திதா ஆகியோரது படங்களின் அப்டேட் வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மகளிர் தின வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் மிஸ் இந்தியா (Miss India Release Date) படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்.
மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி (Miss India Release Date)
அதன் படி, வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி மிஸ் இந்தியா திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எப்போதும், நாங்க இருக்கிற இடத்தில் மேஜிக் இருக்கும் என்று பதிவிட்டு மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
நரேந்திரநாத் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் புதிய படம் மிஸ் இந்தியா.
முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி ரோலில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்காக அவரது உடல் எடையை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.