Home சினிமா கோலிவுட் திருமணமா? எப்போ? கீர்த்தி சுரேஷ் விளக்கம்!

திருமணமா? எப்போ? கீர்த்தி சுரேஷ் விளக்கம்!

397
0
Keerthy Suresh Wedding

Keerthy Suresh Marriage Rumour; திருமணமா? எப்போ? கீர்த்தி சுரேஷ் விளக்கம்! தனக்கும் பாஜக தொழிலதிபருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தி குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் ஒரு சாதாரண நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி முருகன் படம் நல்ல வரவேற்பும், பேரும் கொடுத்தது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள உன் மேல ஒரு கண்ணு பாடல் இன்றும் யூடியூப்பில் 75 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு அவரது அப்பா சுரேஷ்குமார் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பாஜகவில் முக்கிய பங்கு வகிப்பதால், பாஜக தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று கூறப்பட்டது.

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த செய்தி எப்படி வந்தது என்றே எனக்கே தெரியவில்லை. என்க்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்று அவர் கூறியதாக தகவல் வந்துள்ளது.

30 வயதுக்கு மேல் இருக்கும் நடிகைகள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படியிருக்கும் போது, பிரபலங்களின் திருமணம் வதந்தி குறித்து தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. அப்படியிருக்கும் போது, அவரது பெயர் திருமண வதந்தி பட்டியலில் இடம்பெற்று வருவது என்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா: வீட்டிலேயே இருந்தா போர் அடிக்குதா? நடிகை மீனா அறிவுரை!
Next articleவீட்டில் விளக்கு ஏற்றுங்கள்: மோடிக்கு நடிகர் ஜீவா ஆதரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here