Kiran Rathod சர்ச்சைக்குள்ளான வாடியம்மா ஜக்கம்மா கிரண் வீடியோ! கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை கிரண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கிரண் வெளியிட்டுள்ள வாடியம்மா ஜக்கம்மா பாடல் வீடியோ ஒன்று தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை கிரண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஆம், விஜய், ஜோதிகா நடிப்பில் வந்த திருமலை படத்தில் வரும் வாடி அம்மா ஜக்கம்மா பாடலுக்கு நடிகை கிரண், விஜய் உடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார்.
இந்தப் பாடலில் வரும் ஒரு சில காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஒன்றில், உங்களது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சுட்டிக்காட்டுவது போன்று ஒரு காட்சியையும், எந்த தொடுதலும் கூடாது. சமூக இடைவெளி வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவது போன்ற ஒரு காட்சியையும் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதோடு, விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும், கிரண் உடன் வாக்குவாதத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கிரண் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பதிவிட்டு வீடியோவில், இங்கே வாங்க, நாங்களும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்று சில ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.