Home சினிமா கோலிவுட் முத்தங்கள் ரொம்பவே முக்கியம்: ரைசா!

முத்தங்கள் ரொம்பவே முக்கியம்: ரைசா!

378
0
Bigg Boss Raiza

Bigg Boss Raiza முத்தங்கள் ரொம்பவே முக்கியம் என்று பிக் பாஸ் புகழ் ரைசா தெரிவித்துள்ளார்.

Raiza Wilson ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் ரைசா வில்சன் (Raiza Wilson). இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலுக்கு மேனேஜராக நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. எனினும், ரைசாவிற்கு வரவேற்பு என்னவோ கம்மிதான்.

இந்த நிலையில், தான் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் Bigg Boss Tamil நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ரைசாவிற்கு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 63 நாட்கள் தாக்குப்பிடித்தார். அதன் பிறகு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரைசாவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

ரொமாண்டிக், காதல் காட்சிகளை மையப்படுத்திய இப்படத்தை எலன் இயக்கியிருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப் ஐ ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்) மற்றும் ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும், ரைசா வில்சனுடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கௌதம் மேனன், கௌரவ் நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

ரைசா இஸ்டாகிராம் Raiza Wilson Instagram

இந்த நிலையில், தனது இஸ்டாகிராம் பக்கத்தில் நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில், முத்தங்கள் ரொம்பவே முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் அளித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here