Master Dheena; வருமான வரித்துறையினரை எச்சரித்த தீனா! ஈசிஆர்ல ரோடு சும்மா இருக்குன்னு அடிக்கடி ரைடு போகாதீங்க என்று எச்சரித்துள்ளார்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்து வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாஸ்டர். கல்வி முறையை மையப்படுத்திய மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, கவுரி கிஷா, தீனா, ரம்யா சுப்பிரமணியம், சாந்தணு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தீனா கூறுகையில், பைக் வச்சிருக்கும் எல்லோருக்குமே ரைடு போகணும் என்று ஆசை இருக்கும்.
ஆனால், ஈசிஆர்ல ரோடு சும்மா இருக்கு என்று யாரும் ரைடு போகாதீங்க என்று வருமான வரித்துறையினரை எச்சரித்துள்ளார்.
மேலும், மாளவிகா மோகனன் என்னிடம் பேச வேண்டும் என்று ஆசையில் இருந்தார். ஆனால், நான் பிஸியாக இருந்தால் அது முடியாமல் போய்விட்டது என்று கிண்டலாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய கவுரி கூறுகையில், 96 படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தேன்.
ஆனால், மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன். ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. அம்மாவிற்கு நன்றி மற்றும் படக்குழுவினர் பலரும் நன்றி என்றார்.
ரம்யா சுப்பிரமணியம் கூறுகையில், பிகில் இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
ஆனால், தற்போது மாஸ்டரில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். இதைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை என்றார்.
சாந்தணு கூறுகையில், இதுதான் என்னுடைய முதல் படம் போன்று தோன்றுகிறது. மாநகரம் படத்தின் போதே எனக்கு ஒரு கதாபாத்திரம் இருந்தது. ஆனால், அது முடியவில்லை. கைதி படத்திலேயும் அதுபோலத்தான் அதுவும் முடியாமல் போய்விட்டது.
தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளேன். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகன் தான்.
எப்போது விஜய்யுடன் இணைந்து நடிக்க போகிறாய் என்று எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் ரசிகர்களும் நினைத்திருக்கிறார்கள்.
அது இப்பொழுது நிறைவேறிவிட்டது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.