Kushboo; படப்பிடிப்பு எப்போது தொடங்கலாம்: குஷ்பு முக்கிய தகவல்! படப்பிடிப்புக்கு எப்போது செல்லலாம் என்பது குறித்து வரும் 25 ஆம் தேதி தான் சொல்ல முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
வரும் 25 ஆம் தேதிக்குப் பிறகு தான் படப்பிடிப்பு தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தொலைக்காட்சி நிறுவனங்கள், ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர்களைத் தான் மறுபடியும் ஒளிபரப்பி வருகின்றன.
இந்த நிலையில், டிவி சீரியல்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து நடிகை குஷ்பு பேசியுள்ளார். அதன்படி, வரும் மே 5 ஆம் தேதியிலிருந்து டிவி நிறுவனங்கள் படப்பிடிப்புகள் தொடங்கும்.
ஆனால், மே 11 ஆம் தேதி தொடர்கள் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் இது குறித்து பேசியிருக்கிறே. அவர் யோசித்து சொல்வதாக கூறியிருக்கிறார்.
இதே போன்று சுகாதாரத்துறை அமைச்சரிடமும் பேசினேன். அவரோ தற்போதுதான் ரேபிட் டெஸ்ட் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆதலால், வரும் 26, 27-ம் தேதியில் தான் எப்போது உங்களுடைய வேலைகளை ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து சொல்ல முடியும்.
ஆனால், படப்பிடிப்புக்கு அதிக ஆட்களை பயன்படுத்துவது கூடாது. வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.
படப்பிடிப்பின் போது அனைவருமே மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
படப்பிடிப்பு எப்போது என்பதை தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்துவிட்டு தான் சொல்ல முடியும்.
இதைத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடமும், ஆர்.கே.செல்வமணியிடமும் சொல்லியிருக்கிறார்.
மே 11 ஆம் தேதிக்குப் பதிலாக இன்னும் ஒரு வாரம் தள்ளி வைத்தால் கொஞ்சம் தெளிவான கண்ணோட்டத்துக்கு வர முடியும்.
டிவி சீரியல் தயாரிப்பாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்றரை எபிசோடுகள் வரை படப்பிடிப்பு செய்யுங்கள்.
அதிகப்படியான எபிசோடுகளை எடுத்து வைத்துக் கொள்வது உங்களுக்குத்தான் நல்லது. கொரோனா ஒரு பாடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.