Lakshmi Menon; வேதாளம் அஜித்தின் தங்கச்சி லட்சுமி மேனன் பர்த்டே டுடே! வேதாளம் படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்த நடிகை லட்சுமி மேனன் இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை லட்சுமி மேனன் பிறந்தநாள் இன்று.
சசிகுமார் நடிப்பில் வந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.
இப்படத்தின் மூலம், சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
சுந்தரபாண்டியன் படம் ஒன்றே லட்சுமி மேனனை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதே போன்று, கும்கி படமும் தமிழ்நாடு மாநில விருதை பெற்றுக் கொடுத்தது.
விக்ரம் பிரபு நடிப்பில் வந்த கும்கி படத்தில் காட்டுப்பகுதியில் வசிக்கும் காட்டுவாசி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களாகவே அமைந்திருந்தது.
கும்கி நடிகர் விக்ரம் பிரபுவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்தார்.
இவ்வளவு ஏன், கார்த்தி நடித்த கொம்பன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இவ்வளவு ஏன், ஹீரோயினை விட சகோதரி கதையில் கச்சிதமாக பொருந்தியிருந்தார். ஆம், தல அஜித் நடிப்பில் வந்த வேதாளம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
இந்தப் படத்தில், அஜித்திற்கு சகோதரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேதாளம் படத்திற்கு பிறகு மிருதன் படமும் நல்ல ஹிட் கொடுத்தது.
தற்போது சிப்பாய், யங் மங் ஜங் மற்றும் கௌதம் கார்த்திக்கின் படம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த 3 படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகையைத் தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் திகழ்ந்துள்ளார். ஆம், குக்குரு குக்குரு, தேசி கேர்ள், ஓ காஃபி பெண்ணே ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில், லட்சுமி மேனன் இன்று தனது 23 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.