Home சினிமா கோலிவுட் இப்போதான் ஹீரோவா நடிக்கிறார்: அதுக்குள்ள ஃபெப்சிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!

இப்போதான் ஹீரோவா நடிக்கிறார்: அதுக்குள்ள ஃபெப்சிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!

361
0
Legend Saravana Donation

Legend Saravana Donation; லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் ஃபெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

அருள் சரவணன் Arul Saravanan Donation ஃபெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 206 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை தானமாகவும் கொடுத்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், சூர்யா குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், யோகி பாபு, சூரி என்று பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் ஃபெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பொதுவாக திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சினிமா துறையில் தாங்கள் சம்பாதித்த பணத்தைத் தான் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

இன்னும் சில முக்கிய நடிகர், நடிகைகள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில்தான் சினிமாவுக்கு வந்த அருள் சரவணன் தனது முதல் படத்தில் தற்போதுதான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரே ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், Legend Saravana Stores Owner Arul Saravanan Donation ரூ.25 லட்சம் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here