Home சினிமா கோலிவுட் சிம்புவின் கெட்டவன் முடியவேயில்லை: லேகா வாஷிங்டன் வருத்தம்!

சிம்புவின் கெட்டவன் முடியவேயில்லை: லேகா வாஷிங்டன் வருத்தம்!

315
0
Kettavan: Lekha Washington

Kettavan Lekha Washington; சிம்புவின் கெட்டவன் முடியவேயில்லை: லேகா வாஷிங்டன் வருத்தம்! சிம்புவின் கெட்டவன் படம் எடுத்து முடிக்கப்படவில்லை என்று நடிகை லேகா வாஷிங்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கெட்டவன் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்படாததால் நடிகை லேகா வாஷிங்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு வந்த காதலர் தினம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லேகா வாஷிங்டன்.

ஜெயம்கொண்டான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருந்தார். நடிகர் பிரசன்னா நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

மேலும், உன்னாலே உன்னாலே, வா, அரிமா நம்பி என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார். லேகா நடிகர் சிம்பு நடிப்பில் உருவான கெட்டவன் படத்தில் பிராமின் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதலில் இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை சனா கான் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு என்னவோ காரணம் காரணமாக, சனா கானுக்குப் பதிலாக லேகா ஒப்பந்தமானார். இந்த நிலையில், கெட்டவன் படம் குறித்து லேகா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கெட்டவன் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின் போது இயக்குநர் நந்துவிற்கும், சிம்புவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படமும் ரத்து செய்யப்பட்டது.

கெட்டவன் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அனைவருமே வருத்தப்பட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மீது மீடு புகார் கூறினார். ஆம், அவரது டுவிட்டரில் கெட்டவன் மீடு என்று பதிவிட்டிருந்தார்.

அப்போது, அவர் சிம்புவைத்தான் கூறுகிறார் என்று சிம்பு ரசிகர்கள் அவர் மீது விமர்சனம் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஹலோவில் டிரெண்டாகும் கமலின் PanchathanthiramScenes!
Next articleகணவர் பீட்டர் பால் மீது புகார்: கூலாக பதில் சொன்ன வனிதா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here