Lokesh Pop Addy லோகேஷ் பாப்: நண்பர்களால் மறுவாழ்வு பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்! தொலைக்காட்சி செய்திகள், டிவி நிகழ்சிகள், டிவி சீரியல் தொடர்கள்.
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் லோகேஷ் பாப் கை, கால் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பர்கள் திரட்டிய நிதியுதவியின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதித்யா தொலைக்காட்சி விஜே
ஆதித்யா தொலைக்காட்சி சேனலில் காமெடி நிகழ்ச்சியில் கலக்கி அதன் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்தவர் லோகேஷ் பாப் (Lokesh Pop Addy). இவருக்கு என்று ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர்.
இவர், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நானும் ரௌடி தான். இந்தப் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவருக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துவிட்டது.
Master மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு: செஃல்பி எடுத்துக்கொண்ட படக்குழு!
இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக ரூ.7 லட்சம் வரையில் தேவைப்படுகிறது என்று அவரது நண்பர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கேட்டுள்ளனர்.
நண்பர்கள் நிதி உதவி
லோகேஷ் பாப்வின் நண்பரான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளர் திருச்சி சரவணக்குமார் இந்த உதவியை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து குட்டி கோபியும் சமூக வலைதளங்களில் உதவி கேட்க, நடிகர்கள், காமெடி நடிகர்கள் என்று பலரும் உதவி செய்து வருவதாகவும், போதுமான அளவிற்கு நிதியுதவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சன் நெட்வொர்க் மூலமாக முழு உதவியும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் பாப்விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், நாளை பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரை பார்க்க விரும்புவோர்கள் நாளை பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். நண்பர்கள் செய்த உதவியால் அவர் மறுவாழ்வு பெற்று வந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.