Malavika Mohanan; எப்போதும் பெண்கள் சமையல் தான் செய்ய வேண்டுமா? கொந்தளித்த மாளவிகா மோகனன்! விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்ட கார்ட்டூன் பற்றி நடிகை மாளவிகா மோகனன் கோபமாக கருத்து தெரிவித்து அதன் பிறகு அதனை நீக்கிவிட்டார்.
விஜய் ரசிகர் வெளியிட்ட கார்ட்டூன் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கோபமாக டுவீட் செய்துள்ளார். அதன் பிறகு மற்றொரு டுவிட்டரில், வேறொரு கார்ட்டூன் பதிவிட அதனை ரசித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர். இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், ஸ்ரீமன், சஞ்சய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
மாஸ்டர் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படக்குழு குறித்து கார்ட்டூன் வரைந்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில், லேப்டாப், மியூசிக், விளையாடுவது, சமையல் செய்வது போன்று கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. இதைப் பார்த்த மாளவிகா மோகனன் கோபமடைந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் சமைத்துக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது தான் அதற்கு காரணம்.
இது குறித்து டுவிட்டரில், இந்த ஒரு மூவி வீட்டில் கூட பெண்கள் சமைக்கும் வேலை தான் செய்ய வேண்டுமா? இப்படி பெண்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என சொல்லும் முறை எப்போது சாகும்? என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்த டுவீட்டை நீக்கிவிட்டார். பதிலுக்கு ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் புத்தகம் படிப்பது போன்று கார்ட்டூன் வரைந்து பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த மாளவிகா மோகனன் ஐ லவ் திஸ் வெர்ஷன். எனக்கு வாசிப்பது புடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.