மந்திர மாயாஜால பின்னணி கொண்ட கதையில் முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம், மந்திர மாயாஜால சண்டைகள் நிறைந்த திரைப்படமாக உருவாகி வருகிறது.
தனுஷ் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்திலும் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்கும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. யோகி பாபு, லால் என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
‘கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு, ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தவுள்ளார் .
இந்தப் படத்தையும் ‘பட்டாஸ்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
ராம்குமார் படம் தவிர்த்து மற்றொரு படமும் சத்யஜோதி நிறுவனத்துக்காகச் செய்யவுள்ளார் தனுஷ்.
இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும், ராம்குமார் படத்தில் நடித்துக்கொண்டே இயக்குநர் செல்வராகவன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ். செல்வராகவன் படத்தை தாணு தயாரிக்கவுள்ளார்.