Home சினிமா கோலிவுட் Master: மாஸ்டர் அப்டேட் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

Master: மாஸ்டர் அப்டேட் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

556
0
Master sethupathi மாஸ்டர் அப்டேட் விஜய்

Master மாஸ்டர் அப்டேட்: விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளது.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதற்கு முன்னதாக ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இதே போன்று, இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், ரமேஷ் திலக், சுனில் ரெட்டி, ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

Master மாஸ்டர் அப்டேட்

சென்னை கிண்டியில் உள்ள மாணவர்கள் சங்கம் மற்றும் கலை சங்க பொறியியல் கல்லூரியில் நடந்த டெகோஃபெஸ் 2020 நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் அட்லி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ் கூறுகையில், இன்னும் 48 மணிநேரத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இதையடுத்து, படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அப்படியே நெருப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5-ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று விஜய்யிடம் தனது 65-ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleDraupathi: தல நல்லா இருக்காரா? ஷாலினியிடம் கேட்ட ரசிகர்
Next article1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here