Home சினிமா கோலிவுட் மிரட்ட வருகிறார் வாத்தி: ரெய்டுக்கு தயாரா?

மிரட்ட வருகிறார் வாத்தி: ரெய்டுக்கு தயாரா?

449
0

Master Vaathi Raid Third Single; மாஸ்டர் 3 ஆவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் 3 ஆவது சிங்கிள் டிராக் (Master Third Single Track) வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி (Master Release Date) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாக வெளியாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மாஸ்டர் குறித்து அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர்ப் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி கம்மிங் பாடல் வெளியானது.

இதையடுத்து, மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 34 ஆது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரவு 8.30 மணிக்கு மாஸ்டர் 3ஆவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு ஒத்து பாடல் வெளியாக இருக்கிறது என்று அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் விஜய் கோபத்துடன் இருப்பது போன்றும் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நாளை மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

சன் தொலைக்காட்சி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleமனைவிக்கு கொரோனா; பிரதமர் எடுத்த உருக்கமான முடிவு
Next articleநான் பிழைப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை; கொரோனா நபரின் கண்ணீர் கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here