Home சினிமா கோலிவுட் மிரட்டலான டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

மிரட்டலான டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

452
0
Master Trailer Release Date

Master Trailer; மிரட்டலான டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு! மாஸ்டர் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் டிரைலர் (Master Trailer) வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை லீலா பேலஸ் (Leela Palace) ஹோட்டலில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

அதில், மாஸ்டர் படக்குழுவினர் சினேகா பிரிட்டோ, சேவியர் பிரிட்டோ, ரம்யா சுப்பிரமணியம், சாந்தணு, கவுரி, அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, விஜய் ஆகியோரும் பேசினர். லோகேஷ் கனகராஜ் பேசும் போதும், ஒவ்வொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது.

முதலில் வாத்தி என்றுதான் டைட்டில் வைத்ததாக துணை இயக்குநர்கள் அனைவருக்கும் சொல்லியிருந்தோம்.

ஆனால், அறிவிப்புக்கு பிறகு தான் எல்லோருக்குமே தெரியவந்தது. மாஸ்டர் என்று டைட்டில் சூப்பராக இருக்கிறது என்று அனைவரும் பாராட்டினார்கள்.

போஸ்டர் எப்படி இருக்கிறதோ, அதே போன்று டிரைலரும் பிரமாண்டமாக இருக்கும் என்றார். இதுவரை விஜய் எப்படி இருந்தாரோ, என்னெல்லாம் பேசியிருந்தாரோ அதெல்லாம் படத்தில் இருக்காது.

அதுக்கும் வித்தியாசமாக யாருமே எதிர்பாராத புதியதாக இருக்கும் என்றார். ஆக, மாஸ்டர் படத்தில் சிறப்பான சம்பவம் இருக்கு.

தொடர்ந்து பேசிய விஜய், படக்குழுவினர் ஒவ்வொருவரது பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார்.

நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்று தான் கோடு சூட் அணிந்து வந்திருக்கிறேன் என்றார்.

இறுதியில், ரெய்டும் ஜாலியாகத்தான் இருக்கு என்று கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டார். நதியை வைத்து ஒரு கதை சொன்னார்.

அது போலத்தான் வாழ்க்கையும் என்றார். அவரவர் அவரவர் வேலையை பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும் என்றார்.

கடைசியாக விஜய் சேதுபதிக்கு தனது அழுத்தமான முத்தத்தை கொடுத்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி, வரும் மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது #MasterTrailer, #ThalapathySpeech, #VijaySethupathi, #NanbarAjith ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா தடுப்பூசி கண்டறிந்த அமெரிக்கா; முதல் பரிசோதனை இன்று
Next articleஉலகை அச்சுறுத்தவிருக்கும் மற்றொரு பேராபத்து; 40 கோடி மக்கள் நிலை என்னவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here